11934 ஜோர்ஜ் கீற்.

அருந்ததி சபாநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: ஜோர்ஜ் கீற் பவுண்டேஷன், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 2: த யூனியன் பிரஸ் பிரைவேற் லிமிட்டெட், 169/1 யூனியன் பிளேஸ்).

42 பக்கம், ஓவியங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9065-05-X.

இந்நூலில் ஓவியங்களுக்கிடையே உள்ள கட்டுரைகள் 1977ம் ஆண்டில் ஜோர்ஜ் கீற் வாழ்த்துக் குழவின் வெளியீட்டில் பேராசிரியர் ஆஸ்லி அல்பேர்ட் அவர்களினால் எழுதப்பட்டவையாகும். ஜோர்ஜ் கீற் இந்த நூற்றாண்டு (1901-1993) முழுக்க வாழ்ந்த தலைசிறந்த ஈழத்து ஓவியக் கலைஞர். கீற் சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி 1927இல் தீவிர ஓவியராக மாறினார். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்ற ஜோர்ஜ் கீற் தனது பத்து வயதிலேயே சிலுவையில் இயேசு எனும் சித்திரத்தை வரைந்து புகழ் பெற்றார். மல்வத்தை பீடத்தை சேர்ந்த பிக்குவான பின்னவள தீரானந்த தேரோவிடம் பௌத்த சமயக் கருத்துகளை கற்றார் .இரவீந்தரநாத் தாகுரின் நூல்கள் மூலம் இந்து சமயக் கருத்துகளை விளங்கி கொண்டார்.சம்ஸ்கிருத காவியமான கீத கோவிந்தத்தை மொழி . இந்திய இராகம் தொடர்பான விளக்கங்களை பெற்று அது தொடர்பான பல ஓவியங்களை வரைந்தார். கவி சிலுமின, முவதேவ்தாவத,போன்ற சிங்கள கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது ஆக்கங்களில் மேலைத்தேய, கீழைத்தேய கலப்பு, பிக்காசோவின், தடித்த தெளிவான கோடுகளின் செல்வாக்கு போன்றவற்றை காணலாம். கிருஷ்ணன்- ராதை காதல் காட்சிகளை சித்தரிக்கும் ராகினி விராகினி, தலதா பெரகர,குயவன் வேலைத்தளம், நாயிகா, இயமனும் சாவித்ரியும், போன்றன இவரது சிறந்த ஆக்கங்களாகும். இவரது பௌத்த சமயம் சார் ஓவியங்கள் பொரளை கோதமி விகாரையில் காணப்படுகிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18968).

ஏனைய பதிவுகள்

14540 தமிழிசைக்கு புத்துயிர் அளித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1