மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: ம.பொனிபஸ் தைரியநாதன் குடும்பத்தினர், இல.82, ஓடக்கரை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பதிப்பகம்).
88 பக்கம், வண்ணத் தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
அமரர் கலாபூஷணம் கலைவேந்தன் அமரர் ம.பொனிபஸ் தைரியநாதனின் நினைவாக 16.6.2017 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 05.06.1949 அன்று சுன்னாகத்தில் மரியான்-வைத்தியானம் தம்பதிகளின் மகனாகப் பிறந்த நாடகக் கலைஞரான தைரியநாதன் 16.5.2017 இல் தனது 68ஆவது அகவையில் மரணமானவர். நடிகராக மாத்திரமன்றி நெறியாளராகவும், ஒப்பனையாளராகவும். சிறந்த பாடகராகவும் அரங்கியல்துறையில் பரிணமித்தவர். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் பணியாற்றிய இவர் நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் இணைந்து பல நாடகங்களில் பெண்பாத்திரமேற்றுப் புகழ்பெற்றவர். நாடகத்துறையிலும் சமகாலத்தில் ஈடுபட்டுப் புகழ்பெற்றவர். இந்நூலில் அவரது நாடக வாழ்க்கை பற்றிய பல்வேறு அனுபவப் பகிர்வுகள் சக கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.