கை.சரவணன், ந.மயூரரூபன், சி.நிஷாகரன், லேணையூர் சுரேஷ், முல்லைக் கமல், ரீ.ரமணன். யாழ்ப்பாணம்: எழுகலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜுலை 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ்).
viii, 245 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 25.5×18.5 சமீ., ISBN: 978-955-7842-00-4.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களது நேர்காணல் இவ்வாவணத்தின் முதலாவது பதிவாக உள்ளது. கை.சரவணன், ந.மயூரரூபன், சி.நிஷாகரன், வி.பி.ஜோசப் ஆகியோர் இந்நேர்காணலை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து வரும் ‘வழிகாட்டியோரும் சகபாடிகளும்’ என்ற பிரிவில் அ.சண்முகதாஸ், இ.பாலசுந்தரம், சபா ஜெயராசா, என்.சண்முகலிங்கன், க.தேவராஜா, ம.வ.கானமயில்நாதன், பீ.எஸ்.பெருமாள், சு.செல்லத்துரை, விபி.சிவநாதன், கனகசபை நடராஜர், எஸ்.திருச்செல்வம், ச.வே.பஞ்சாட்சரம், செ.யோகராசா, ஆறு திருமுருகன், கே.ஆர்.டேவிட், சோ.தேவராஜா, ச.முருகானந்தன், ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன், தி.திருநந்தகுமார், ந.சண்முகப்பிரபு, வ.க.பரமநாதன், என்.கணேசலிங்கம், டேவிட் லிகோரி, சு.ராஜன், இணுவையூர் பாஸ்கர், செ.செல்வராஜா, துரை எங்கரசு, டானியல் சௌந்திரன், ம.கதிர்காமநாதன், வை.கதிரமலை, ம.சந்திரபோஸ், எஸ்.சீவரத்தினம், க.கமலேஸ்வரன், கோகிலா மகேந்திரன், ச.நகுலேஸ்வரன், வே.ஐ.வரதராஜா, க.சிதம்பரநாதன், ராஜநாயகம் பாரதி, ச.ராதேயன், வளவைவளவன், என்.கே.துரைசிங்கம் ஆகியோரின் மனப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்துவரும் ‘இணைந்து வளர்ந்தவர்கள்” என்ற பிரிவில் வ.மகேஸ்வரன், எஸ்.ரகுராம், க.ஸ்ரீகணேசன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், ந.லோகதயாளன், த.சிவகுமாரன், கை.சரவணன், வேலணையூர் சுரேஸ், ரி.குமரன்-ரி.அருட்குமரன், ச.கமலநந்தினி, இ.அருணகிரிவாசன், நாக சிவசிதம்பரம், செ.செல்வகுமார், ஆதிலட்சுமி சிவகுமார், சி.கதிர்காமநாதன், தி.சிதம்பரபாரதி, ந.மயூரன், முல்லைக்கமல், சி.பீஸ்மன், சிவப்பிரகாசம் ராஜ்குமார், பு.சத்தியமூர்த்தி, வி.பி.ஜோசப், தே.தவராஜசேகரம், காயத்திரி பயஸ்ராஜா, அலெக்ஸ் பரந்தாமன், ந.ஞானசூரியர், ம.சாம் பிரதீபன், சி.நிஷாகரன், க.தே.புரட்சிதாசன் ஆகியோர் தம் வாழ்வில் சிதம்பர திருச்செந்தினாதன் ஏற்படுத்திய இனிய தருணங்களை நினைவுகூர்ந்துள்ளனர். தொடர்ந்து இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எழுதிய வெட்டுமுகம், என்னுடையதும் அம்மாவினுடையதும், மணல்வெளி அரங்கு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுக்காக நா.சுப்பிரமணியன், கா.சிவத்தம்பி, சி.சிவசேகரம் ஆகியோர் வழங்கிய முன்னுரைகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப்பிரிவில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், மனமும் மனத்தின் பாடலும் (முல்லைக்கமல்), களத்திலே வீழ்வோம் (குழல்), செய்தித்துறை ஒரு பார்வை (தவராஜா சத்தியன்), நிதர்சனத்தின் புத்திரர்கள் (கந்தையா ஸ்ரீகணேசன்), மண்ணின் வேர்கள் (க.இரத்தினசிங்கம்) ஆகிய நூல்களுக்கு எழுதி வழங்கிய முன்னுரைகள் இடம்பெற்றுள்ளன.