11938 கணேசையர் நினைவு மலர்.

மலர்க் குழு. தெல்லிப்பழை: ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1960. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xliii, 348 பக்கம், விலை: ரூபா 7.50, அளவு: 24.5×18.5 சமீ.

மகாவித்துவான் மறைத்திரு சி.கணேசையர் அவர்கள் (க.கி.நடராஜன்), ஐயரும் புலவரும் (கு.அம்பலவாணபிள்ளை), வித்துவசிரோமணி பிரமஸ்ரீ கணேசையரின் சைவத் தொண்டுகள் (ச.குமாரசுவாமிக் குருக்கள்), ஈழநாட்டு உரையாசிரியர்கள் (மா.பீதாம்பரன்), வித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் (ப.சிவானந்தையர்), ஈழம் வளர்த்த உரைநடை (எப்.எக்ஸ்.சி.நடராசா), ஈழநாடுஞ் சைவமும் (ச.அம்பிகைபாகன்), தொல்காப்பியம் (சி.கணபதிப்பிள்ளை), புதியன புகுதல் (தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்), இலக்கிய மதிப்பீடு (மு.வரதராசனார்), பழமையும் புதுமையும் (கா.பொ.இரத்தினம்), தொல்காப்பியர்-தொல்பெரும் மொழிநூற் புலவர் (சி.இலக்குவனார்), நல்லறமும் நற்றிணையும் (சொ.சிங்காரவேலனார்), சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு (எஸ்.தனிநாயக அடிகள்), கனாத்திறம் உரைத்தல் (இராஜரத்தினம் அம்மையார்), வாழும் வேந்தர் (சீ.நயினார் முகம்மது), சங்ககாலத்திற் காதல் (மா.இராசமாணிக்கனார்), முப்பாலும் நாற்பயனும் (வ.நடராஜன்), திருக்குறட் கடவுள் வாழ்த்து ஆராய்ச்சி (கே.ஈ.மதியாபரணம்), கம்பன் காட்டும் இல்லுக்குரிய நல்ல சூழல் (பொ.கிருஷ்ணபிள்ளை), அருந்தமிழ்ப் புலவரின் அஞ்சாப் பெருமை (வ.மு.இரத்தினேசுவர ஐயர்), காவடிச் சிந்து (அ.மா.பரிமணம்), ஓதும் மறைகளில் ஓங்காரம் (கே.எம்.பாலசுப்பிரமணியம்), தமிழிலக்கிய மரபும் பக்திப் பாடல்களும் (வி.செல்வநாயகம்), சம்பந்தன் தன்னைப் பாடினான் என்றதின் ஆராய்ச்சி (ப.சோதிமுத்து), சீகாழிச் சேயும் திருமங்கை மன்னனும் (மகேஸ்வரி மகாதேவா), குமரகுருபர சுவாமிகள் (ஜே.எம்.சோமசுந்தரம்பிள்ளை), சிதம்பரம் (மு.ஞானப்பிரகாசம்), சிவாநுபூதிச் செந்நெறி (க.நவரத்தினம்), கொங்குநாட்டிற் சைவம் (ம.இராமச்சந்திரன்), சமந்தகூடம் அல்லது சிவனொளிபாதம் (கே.வீ.எஸ்.வாஸ்), மொழிபெயர்ப்புஞ் சொல்லாக்கமும் (ச.பேரின்பநாயகம்), காளிதாசன் (ச.அமிர்தாம்பிகை), இரகுவம்சம் (பொன்.முத்துக்குமாரன்), எங்குருவின் இணையடிகள் ஏத்தி வாழ்வோம் (இ.நமசிவாய தேசிகர்), ஈழத்துப் புலவர் சரிதைதனை யாத்த மூர்த்தி (ச.பொன்னுத்துரை), மங்கல வாழ்த்துப்பா (நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர்), வெள்ளணி மங்கலம் (சோ.இளமுருகனார்), தொல்-சொல்லதிகாரச் சிறப்புப் பாயிரம் (ச.கந்தையபிள்ளை), தொல்-சொல்லதிகாரச் சிறப்புப் பாயிரம் (வே.மகாலிங்கசிவம்) ஆகிய சிறப்புக் கட்டுரைகளையும் செய்யுள்களையும் கொண்ட மலர். அநுபந்தமாக சி.கணேசையர் எழுதிய செந்தமிழ்ச் தீஞ்சுவை, வாழ்த்துப்பா என்பனவும் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10756).

ஏனைய பதிவுகள்