11939 செங்கை ஆழியான் நினைவலைகள்.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: சாகித்ய ரத்னா கலாநிதி கந்தையா குணராசா அவர்களின் நினைவு வெளியீடு, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

92 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

சாகித்ய ரத்னா கலாநிதி கந்தையா குணராசா அவர்களின் மறைவையொட்டி, இடம்பெற்ற 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வின்போது 29.03.2016 அன்று பல்வேறு பிரமுகர்களின் அஞ்சலிச் செய்திகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர். செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (ஜனவரி 25, 1941 – பெப்ரவரி 28, 2016) ஒரு பன்னூலாசிரியராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் எழுதியுள்ளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும், உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பெற்றார். புவியியல் சிறப்புப் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்தார். 1984 ஆண்டு முதுகலைமானிப் பட்டத்தையும், 1991 ஆண்டு கலாநிதிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். செங்கை ஆழியானுக்கு இலக்கிய உலகு, கல்வி உலகு, நிர்வாக உலகு என மூன்று ஆளுமையாற்றல்கள் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61363).

ஏனைய பதிவுகள்