கலைச்செல்வன். கொழும்பு 2: இலக்கிய முற்றம், ஈ.ஜீ.02 தேசிய வீடமைப்புத் திட்டம், விதானகே மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 81 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-7691-02-2.
எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் வாழ்க்கை மற்றும் அவரது எழுத்துலக அனுபவங்கள், படைப்புகளின் பரிமாணங்கள் ஆகியவை பற்றி கலைஞர் கலைச்செல்வன் மிகச் சிறப்பாக இந்நூலில் படம்பிடித்துத் தந்துள்ளார். நூலாசிரியர் ஜெயகாந்தனைச் சந்தித்த வேளையில் பெற்ற அனுபவங்களையும் அவரது படைப்புக்களில் தனக்கிருந்த ஈடுபாட்டையும் இருபத்துநான்கு வாரங்களாக தினகரன் பத்திரிகையில் கலைச்செல்வன் எழுதிய தொடர் கட்டுரையே இங்கு நூல்வடிவம் பெற்றுள்ளது. தனக்கே உரித்தான தனித்துவமான மொழிநடையில் சுவாரஸ்யம் குன்றாமல் எழுதியுள்ளார்.