செல்லத்துரை சுதர்சன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
xx, 472 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8354-69-8.
22.01.2017 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ஞானம் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்களின் 75ஆவது அகவையின் நினைவாக ஒழுங்குசெய்யப்பட்ட பவளவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்து இலக்கியப் பரப்பில் நாவல்/சிறுகதை இலக்கியம், தன் வரலாறு/பயண இலக்கியம், தொகுப்பு/பதிப்புத்துறை, இதழ்/இதழியல்துறை, இலக்கியம்/சமூகச் செயற்பாடுகள் என்னும் ஐம்பெரும் அம்சங்கள் சார்ந்தும் நிகழ்ந்த முன்னெடுப்புக்கள் இப்பெருமலரில் பதிவாகியுள்ளன. இம்மலருக்கான ஆலோசனைக் குழுவில் பேராசிரியர்கள் எஸ்.சிவலிங்கராசா, சோ.சந்திரசேகரம், துரை மனோகரன், சபா.ஜெயராசா, செ.யோகராசா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். நா.சுப்பிரமணியன், சி.தில்லைநாதன், அ.சண்முகதாஸ், அகளங்கன், சு.ஸ்ரீகந்தராசா, எம்.ஜெயராம சர்மா, எம்.ஏ.நுஃமான், சோ.சந்திரசேகரம், சபா.ஜெயராசா, துரை மனோகரன், எஸ்.சிவலிங்கராஜா, செ.யோகராசா, என்.சண்முகலிங்கன், வ.மகேஸ்வரன், க.நாகேஸ்வரன், கந்தையா ஸ்ரீகணேசன், நூலகவியலாளர் என்.செல்வராஜா, தெளிவத்தை ஜோசப், தெணியான், தமிழ்நேசன் அடிகளார், மு.பொன்னம்பலம், அன்னலட்சுமி இராஜதுரை, ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கே.எஸ்.சிவகுமாரன், மானாமக்கீன், பத்மா சோமகாந்தன், மா.பா.சி., மேமன்கவி, முருகபூபதி, மொழிவரதன், கே.ஆர்.டேவிட், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், கே.வெள்ளைச்சாமி (குறிஞ்சிநாடன்), எம்.ஐ.நாகூர்கனி, உடுவை எஸ்.தில்லைநடராஜா, கே.விஜயன், திக்கவல்லை கமால், எஸ்.முத்துமீரான், எம்.எம்.மன்சூர், வீ.என்.சந்திரகாந்தி, எம்.கே.முருகானந்தன், ஐ.இராமசாமி, சூசை எட்வேர்ட், கேணிப்பித்தன் ச.அருளானந்தம், ச.முருகானந்தம், நவம் வெள்ளைச்சாமி, சு.சிறீஸ்கந்தராஜா, மு.சிவலிங்கம், சுதாராஜ், அ.கனகசூரியர், அந்தனி ஜீவா, இரா.அ.இராமன், உ.நிசார், மடுளுகிரிய விஜேரத்தினா, கே.பொன்னுத்துரை, வேல் அமுதன், தீரன் ஆர்.எம்.நௌஷாத், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், ரா.நித்தியானந்தன், எஸ்.வன்னியகுலம், நடராஜா சச்சிதானந்தன், கண. மகேஸ்வரன், வவுனியூர் இரா.உதயணன், இ.இராஜேஸ்கண்ணன், வி.ஜீவகுமாரன், சாரல் நாடன், முஸ்டீன், வைரமுத்து சிவராஜா, வேல்.நந்தகுமார், எம்.எம்.ஜெயசீலன், பொன் புத்திசிகாமணி, கே.எஸ் சுதாகர், சித்ரா சின்னராஜன், செ.சக்திதரன், தே.கஜீபன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, க.அருணாசலம், ஆர்.சிவகுருநாதன், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், சமரபாகு சீனா உதயகுமார், சி.விமலன், எம்.என்.ஜஸ்மினா, எம்.வை.எப்.ரிஸ்மியா, த.அருள்விழி, பா.காயத்திரி, எம்.எஸ்.எப்.ஷப்னா, கனகரத்தினம் கனகதுர்க்கா, சின்னராசா குருபரநாத், நவகீதா கதிரவேலு ஆகிய இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் ஆர்வலர்களும், தமிழகத்திலிருந்து ம.இரகுநாதன், இரா.காமராசு, தெ.வெற்றிச் செல்வன், கு.சின்னப்பபாரதி, கோவை ஞானி, பொன்னீலன், த.பாலுசாமி, து.ரேணுகாதேவி, கே.ஜீ.மகாதேவா, தி.மோகன்ராஜ் ஆகியோரும் இப்பெரும் தொகுப்பில் உள்ள 100 மனப்பதிவுகளையும் வழங்கியுள்ளனர்.