தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை. கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல. 14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 10: பாஸ்ட் பிரின்டெரி பிரைவேட் லிமிட்டெட், இல. 165, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை).
viii, 149 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-7544-07-6.
இலங்கையர்களான எழுத்தாளர்களின் பெயர், நிரந்தர முகவரி, அலுவலக முகவரி, தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை அகரவரிசையில் தந்துள்ளார்கள். தமிழ், முஸ்லிம், சிங்கள படைப்பாளர்களின் முகவரிகள் இப்பட்டியல் நூலில் அடங்கியுள்ளன. தமிழ் எழுத்தாளர்களில் 94 பெயர்களும், முஸ்லிம் எழுத்தாளர்களில் 46 பெயர்களும் மாத்திரமே தேசிய மட்டத்தில், தேசிய நூலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பெயர்களில் ஒரு சில தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களே பரிச்சயமான எழுத்தாளர்களாக எம்மால் இனங்காண முடிகின்றது. தமக்கான தகவல் வளமாக சர்வதேச தராதர நூல் எண் கோவையை தொகுப்பாளர்கள் பயன்படுத்தியிருந்தமையால் தமது நூல்களுக்காக ISBN இலக்கத்தினைப் பெறுவதற்கு முன்னைய ஆண்டுகளில் விண்ணப்பித்திராத தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற வாய்ப்பிருந்திராது.