ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). தோற்றாத் தீவு: புலவர்மணி நினைவுவிழா 1991 வெளியீடு, ஜீவா பதிப்பகம், 3வது பதிப்பு, கார்த்திகை 1991, 1வது பதிப்பு, 1983, 2வது பதிப்பு, 1989 (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9).
xxxx, 192 பக்கம், விலை: கனெடிய டொலர் 10., அளவு: 21×13.5 சமீ.
மட்டக்களப்பு மாநில அறிஞர் வரிசையில் தனியான ஒரு இடம் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையவர்களுக்குண்டு. அவரது தமிழ் இலக்கியப்பணியும், சமூக சமயப் பணிகளும் தேசிய நோக்குடன் மனங்கொள்ளத் தக்கன. புலவர்மணியவர்கள் தாம் வாழ்ந்த எழுபத்தொன்பது ஆண்டு காலப்பகுதியில் தமக்கெனவொரு பாரம்பரியத்தினை உருவாக்கிச்சென்றுள்ளார். கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் என்ற ஊரைச்சேர்ந்த புலவர்மணி அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு புலவர்மணிக் கோவை செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளது. ஈழத்துப்பூராடனார் இந்நூலின் முதற்பதிப்பை 1984இலும், பின்னர் ஈழத்துப்பூராடனார் நூற்றிரட்டில் பிரபந்தவியல் என்ற பிரிவில் இரண்டாவது மீள்பதிப்பாக 1988இலும் இந்நூலை வெளியிட்டிருந்தார். இந்த அகப்பொருட் கோவை நூலை புலவர்மணியின் நினைவுவிழா நூலாக மீண்டும் 1991இல் கார்த்திகை 2இல் புதுக்கிய மூன்றாவது பதிப்பாக வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12709).
14A28 புலவர்மணிக் கோவை.
ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்), பி.ப.செல்வராசகோபால் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான பாதை, தேற்றாத்தீவு, 1வது பதிப்பு, 1984. (களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான பாதை, தேற்றாத்தீவு).
xvi, 80 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 21×13.5 சமீ.
மட்டக்களப்பு மாநில அறிஞர் வரிசையில் தனியான ஒரு இடம் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையவர்களுக்குண்டு. அவரது தமிழ் இலக்கியப்பணியும், சமூக, சமயப் பணிகளும் தேசிய நோக்குடன் மனங்கொள்ளத் தக்கன. புலவர்மணியவர்கள் தாம் வாழ்ந்த எழுபத்தொன்பது ஆண்டு காலப்பகுதியில் தமக்கெனவொரு பாரம்பரியத்தினை உருவாக்கிச்சென்றுள்ளார். கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் என்ற ஊரைச்சேர்ந்த புலவர்மணி அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு புலவர்மணிக் கோவை செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன. 425 செய்யுட்களுடன் அகப்பொருட் கோவையாக இது ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11266. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 11945).