கை.சரவணன், ந.மயூரரூபன். யாழ்ப்பாணம்: எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜுலை 2016. (சுன்னாகம்: முத்து பிறின்டர்ஸ்).
(4), 68 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12 சமீ.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளுள் ஒருவர். அவரது துணைவியார் திருமதி இராஜநாயகி சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களின் மறைவினையொட்டி அவரது வாழ்க்கை பற்றிய இந்நூலை வெளியிட்டிருக்கிறார். அமரர் இராஜநாயகி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். தனது துணைவியாரின் பிரிவுத்துயரை, அவரது இல்வாழ்வின் மலரும் நினைவுகளாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன் காதல் துணையை சந்தித்தது, காதல்வயப்பட்டது, அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தது என வாழ்வின் இனிய நினைவுகளை இந்நூலில் மீள்பதிவுசெய்துள்ளார்.அவருடன் பணியாற்றிய தோழர்களின் பார்வையில் இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், வாசகருக்கு இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனே கதைசொல்லியாகத் தோற்றமளிக்கின்றார்.