11949 விழிசை சிவம்-முத்து: ஜனன நூற்றாண்டு மலர்.

கோகிலா மகேந்திரன்; (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (கோண்டாவில்: சாஜி பிரிண்டர்ஸ்).

x, 74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அமரர்களான சிவசுப்பிரமணியம் தம்பதியினரின் நூற்றாண்டு நினைவு மலராக அன்னாரின் நினைவுகளையும் படைப்புகளையும் சுமந்து இம்மலரை அவர்களது மகளான திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் அழகுறத் தொகுத்து வழங்கியிருக்கிறார். முன்னதாகத் தாயாரின் மறைவின் அந்தியேட்டி நிகழ்வின்போது ‘விழிமுத்து’ என்ற மலரை பலரது நினைவுப் பதிதைகளின் தொகுப்பாக வெளியிட்டிருந்தார். சில மாதங்களின் பின்னர் தந்தையார் இறந்தவேளையில் அந்தியேட்டி மலராக ‘இறைமணிமாலை’ என்ற மலரை அவரது பக்திப்பாடல்களின் தொகுப்பாக வெளியிட்டிருந்தார். அமரர் சிவசுப்பிரமணியம் அவர்களின் மறைவின் பத்தாண்டு நினைவின்போது, அவரது வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் ‘விழிசைச் சிவம்’ என்ற மலரை தெல்லிப்பழை இலக்கியக்களத்தினரின் உதவியுடன் வெளியிட்டிருந்தார். இப்போது அமரர்களின் ஜனன நூற்றாண்டுகளான 2014, 2015 இல் மீண்டும் இம்மலர்களை இணைத்துத் தனித்தொகுப்பாக கலை இலக்கியக்கள வெளியீடாக வெளியிட்டுள்ளார். தந்தையாரின் கவிதைகள், கட்டுரைகள், சித்திரங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன. நினைவுக் கட்டுரைகளை கா.சிவபாலன், கலாபூஷணம் சு.செல்லத்துரை, சோ.பத்மநாதன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்