மகாராஜா ஸ்ரீராஜசேகரா (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
496 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 20.5×14.5 சமீ.
பல்லவராசசேகரன், இராஜசேகரம் ஆகிய பெயர்களிலும் எழுதிவரும் திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் இலங்கை தமிழ் மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தவிசாளரும், ஆராய்ச்சியாளருமாவார். தமிழ்ப் பிரதேசத்தில் சித்தா சுகாதார சேவையை 1987இல் தாபித்து 1996வரை அதனை நடத்திவந்தார். சிங்கை மன்னர் பரம்பரையில் தோன்றிய இராசசிம்மனின் வழித்தோன்றலாகிய நூலாசிரியர் தனது மூதாதையரான சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் வரலாற்றினை இந்நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார். திருநாடு, சிங்கைப் பேரரசர் நாகநாதர், சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கநகர், சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லைநகர், சிங்கை மன்னர், குறுநில மன்னர்கள், கண்டி அரசர்கள், கோட்டை அரசர்கள், வெளிநாடுகளில் பல்லவர் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் விரிவான உசாத்துணைகளுடன் எழுதப்பட்டுள்ளது.