முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை)
xi, 172 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ.
தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்-யுவதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், வரவு செலவுத்திட்டம் பற்றிய உரை, போர் தின்ற நகரங்களின் தற்போதைய அவல நிலை, அவசரகாலச் சட்டத்திற்கான எதிர்க்குரல், வி.நவரத்தினம் பற்றிய நினைவுரை, வடக்கு மாகாணத்தின் பதவி வெற்றிடங்களை நிரப்பல், யுத்தப் பாதிப்புப் பிரதேச அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கல், நெடுஞ்சாலைப் புனரமைப்பினை துரிதமாக்க முக்கியத்துவமளித்தல், வடக்கு மாகாண சபையை அரசியல் தலைமைத்துவமுடைய சபையாக உருவாக்குதல், யாழ்ப்பாணத்தின் அச்ச நிலை, யாழில் வதந்திகள் பரப்பும் அரசியல் வேண்டாம், வன்முறையால் பாதிக்கப்படாத சமுதாயத்தைக் கட்டியெழுப்பல், செய்திப் பிரசுரிப்பில் பத்திரிகைகளின் பொறுப்புணர்வு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடு, உள்ளுராட்சி சபைகளுக்குரிய வீதிப் புனரமைப்பு, பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை, நீர்விநியோகத்திட்டங்களின் தேவை, விவசாயிகளுக்கான உதவிகள், மீன்பிடித்துறை மேலும் வலுப்படுத்தப்படவேண்டும், வடக்கு கிழக்கில் மூடப்பட்ட தொழில் மையங்களை மீள ஆரம்பித்தல் என 26 பாராளுமன்ற உரைகள் 2010-2011 காலகட்டங்களில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் மு.சந்திரகுமார் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தப் பாராளுமன்ற உரைகள் அனைத்தும் திகதி வாரியாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.