நாவலர் ஏ.இளஞ்செழியன். கொழும்பு 11: இளம் சோசலிச முன்னணி, 66, 1/3. முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 13: பிரதீப் பப்ளிக்கேஷன்ஸ், 486/33, புளுமெண்டால் வீதி).
33 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18.5×12.5 சமீ.
அட்டன் செட்டிக் மண்டபத்தில் 22.10.1983 அன்று நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்கள் கூட்டணியின் பேராளர் மாநாடு கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.செல்லையாஅவர்களின் தலைமையில் நடைபெற்றபொழுது பொதுச் செயலாளர் தோழர் ஏ.இளஞ்செழியன் சமர்ப்பித்த இந்த அறிக்கை, 15.11.1997 அன்று நூலுருவில் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17899).