11959 மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.

திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு). யாழ்ப்பாணம்: ரஜனி பதிப்பகம், 707 ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).

xiv, 501 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14 சமீ.

இத்தொகுப்பிலுள்ள திருநாவுக்கரசு சிறிதரனின் கட்டுரைகள் தேனி இணையத்தளத்திலும், ஈ.பீ.ஆர்.எல்.எப். இணையத்தளத்திலும், கண்ணோட்டம் பத்திரிகையிலும் வெவ்வேறு காலகட்டங்களிலும் எழுதிப் பிரசுரமானவை. தார்மீக வலுவிழந்த தமிழ் அரசியல், அனுபவங்களிலிருந்து கற்போம், பலசேனா பாசிசம் தோற்கடிக்கப்படவேண்டும், அழுத்தமில்லாமல் அரசியல் மறுசீரமைப்பு நிகழாது, 1983: இருண்ட நாட்களும் நாம் செய்யவேண்டிய பணிகளும், இலங்கையில் நலிவுற்றுவரும் அறவுணர்வு, கொசொவாவும் இலங்கையும், இறுதியும் முதலுமான வடக்கு-கிழக்கு மாகாண அரசு, மீண்டும் நழுவிப்போகும் வரலாற்றுச் சந்தர்ப்பம், 2014 தெலுங்கானா-ஸ்கொட்லாந்து மற்றும் கிறிமிய அனுபவங்கள் போன்ற இன்னோரன்ன 129 தலைப்புகளில் எழுதப்பட்ட சமகால அரசியல் சிந்தனைக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்