சி.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxxvi, 550 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 2500., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-9233-43-5.
பரத கண்டத்தில் நாகர் (சி.பத்மநாதன்), பிராகிருத மொழிக் கல்வெட்டுக்களில் நாகர் (சி.பத்மநாதன்), பிராகிருத மொழிக் கல்வெட்டுக்களில் தமிழ்மொழியின் செல்வாக்கு (சி.பத்மநாதன்) ஆகிய முதல் மூன்று கட்டுரைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள் என்ற தலைப்பின்கீழ் இலவாணை வேரத்துச் சின்னங்கள் (சி.பத்மநாதன்), பிளாக்குழி வேரம்-மணிணாகன் (சி.பத்மநாதன்), கல்லடிச்சேனை வேரம் (சி.பத்மநாதன்), பாலாமடுவில் மணிணாகன் பள்ளி (சி.பத்மநாதன்), வந்தாறுமூலையில் நாகர் (சி.பத்மநாதன்), மாவடிவேம்பு காளியம்மன் கோயிலிற் காணப்படும் வட்ட வடிவமான கற்கள் (சி.பத்மநாதன்), வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் கோயிலின் புராதன காலத்து வரலாற்றுச் சின்னங்கள் (செ.பத்மநாதன்), மாவடிவேம்பில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட நாகரின் கிணறு (சி.பத்மநாதன்), வாகரைப் பிரதேசத்தில் தமிழரின் புராதன காலப் பண்பாட்டுச் சின்னங்கள் (இ.இராகுலநாயகி), படிவெட்டின மலையிலுள்ள தொல்பொருட் சின்னங்கள் (செ.பத்மநாதன்), குடும்பிமலையில் நாகரின் வழிபாட்டுச் சின்னங்கள் (அ.சதானந்தன்), குசலான் மலைத் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் (சி.பத்மநாதன்), நாவற்குடாவில் 2000 வருடங்களுக்கு முன்பு நாகர் அமைத்த கோயில் (வ.குணபாலசிங்கம்), களுவாஞ்சிக்குடியில் மிகத் தொன்மையான தமிழரின் பண்பாட்டுச் சின்னங்கள் (சி.பத்மநாதன்), தாந்தாமலையில் நாக அரசர்களின் அரண்மனையும் கோயில்களும் (வ.குணபாலசிங்கம்), மகிழடித்தீவு கண்ணகை அம்மன் கோயில் தொல்பொருட் சின்னங்கள் (சி.பத்மநாதன்), வெல்லாவெளியிலுள்ள விவேகானந்தபுரத்தில் நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள் (எழில்வாணி பத்மகுமார்), வெல்லாவெளி தும்பங்கேணியிலுள்ள நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள் (எழில்வாணி பத்மகுமார்), வெல்லாவெளி களுமுந்தன் வெளியில் நாகரின் வழிபாட்டுச் சின்னங்கள் (சி.பத்மநாதன்), நெடியமடுவில் நாகரின் கல்வெட்டுகள் (சி.பத்மநாதன்), வந்தாறுமூலை கண்ணகியம்மன் கோயிலின் உலோகச் சின்னங்கள் (சி.பத்மநாதன்), ஆகிய கட்டுரைகள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழரின் புராதனகாலப் பண்பாட்டுச் சின்னங்கள் என்ற தலைப்பின்கீழ், சங்கமன் கண்டியில் நாகர் (சி.பத்மநாதன்), கஞ்சிகுடிச்சாற்றில் மலையிற் குடைந்த நாகர் கோட்டங்கள் (சி.பத்மநாதன்), காரைதீவில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் (சி.பத்மநாதன்), தம்பலகாமம் பண்பாட்டுச் சின்னங்கள், கல்வெட்டுகள் (த.ஜீவராஜ்), திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில புராதனமான கல்வெட்டுகள் (அ.சதீஸ்குமார்), திருக்கரசையில் நாகர் அமைத்த கோயில் (சி.பத்மநாதன்), கோகர்ணத்தில் நாகர் அமைத்த ஈஸ்வரம் (சி.பத்மநாதன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து, மட்டக்களப்பில் நாகரின் ஆட்சி (சி.பத்மநாதன்), வழிபாட்டு நெறிகள் (சி.பத்மநாதன்), ஆகிய கட்டுரைகளைத் தொடர்ந்து பின்னிணைப்பில் வெல்லாவெளிக் கல்வெட்டுக்கள் (சி.பத்மநாதன்), பாலாமடுவிற் கிடைத்த சுடுமண் படிமமும் கலவோடுகளும் (சி.பத்மநாதன்) ஆகிய கட்டுரைகள் காணப்படுகின்றன.