B.A.S. சுப்யான். கொழும்பு 6: வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பு, NMRO, 15A, ரோகிணி வீதி, 1வது பதிப்பு, மே 1997. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1B, P.T.De சில்வா மாவத்தை).
iv, 24 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 20×14 சமீ.
வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பின் (Northern Muslims’ Rights Organisation) உப தலைவரான மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் (யாகூத்தி) அவர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இதுவாகும். இவை முன்னர் தினகரன் வாரமஞ்சரி, சரிநிகர், அல் ஹஸனாத், யுக்திய (சிங்களம்) ஆகிய ஊடகங்களில் பிரசுரமாகியவை. வடக்கு முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகள் பற்றி தமிழ் முஸ்லிம் மக்கள் அறிந்துகொண்டு, நன்கு தெளிவுபெற்று நியாயமான அவ்வுரிமைகளையும் அவர்களின் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் தெளிவான சிந்தனையுடன் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்நேர்காணல்கள் வலியுறுத்துகின்றன.