11974 அனலைதீவு: வாழ்வும் வளமும் வரலாற்று நூல்.

பெ.துரைராஜா (பதிப்பாசிரியர்). கனடா: Publishing Committee, Life and Lustre of Analaitivu, 880, Ellesmare Road, Suite 203, Toronto, Ontario M1P 2W6, 1வது பதிப்பு, ஜுன் 2008. (Canada: R.J.Multi Litho Inc.,2708, Coventry Road, Oakville, Ontario L6H 6R1)

xviii, 398 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ.

முகவுரை, வாழ்த்துரைகள், நிர்வாகிகளின் உரைகள் என்பவற்றைத் தொடர்ந்து, அனலை ஆலயங்களும் வரலாறுகளும்  என்ற பிரிவில் 25 கட்டுரைகளும், புவியியலும் மக்கள் வரலாறும் என்ற பிரிவில் 96 கட்டுரைகளும், வாழும் பெரியார் என்ற பிரிவில் அனலைதீவைச் சேர்ந்த 40 பிரமுகர்கள் பற்றிய தகவல்களும், மறைந்த பெரியார் என்ற பிரிவில் அனலைதீவில்  பிறந்து மறைந்த 79 பெரியார் பற்றிய தகவல்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47494).

ஏனைய பதிவுகள்