உடப்பூர் வீரசொக்கன். புத்தளம்: உடப்பு இளந்தாரகை வட்டம், உடப்பூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
x, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-1907-04-4.
ஆய்வு நோக்கில் எழுதப்பட்டள்ள இந்நூல், புத்தளம் மாவட்டத்தின் பூர்வீகத் தமிழ் அடையாளங்களைத் தேடுவோருக்குப் பல வரலாற்றுத் தகவல்களைத் தருகின்றது. புத்தளம் மாவட்டத்தின் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட 77 கிராமங்களின் விபரத்தினை இந்நூலில் ஆசிரியர் ஆவணப்படுத்தியிருக்கிறார். உடப்பூர் கிராமம், முன்னேஸ்வரம், புளிச்சாக்குளம், முந்தல், கருக்குப்பனை, தாராக்குடிவில்லு, கருங்காலிச்சோலை, கரடிப்பூவல், பொன்பரப்பி-காரைதீவு, கற்பிட்டி, தில்லையடி, மணல்தீவு, நரக்களி, கனமூலை, தோப்பு, மாம்புரி, நவநீதன்குளம், மங்கள ஒளி (மங்கள் எலிய), அக்கரைவெளி, கீரியங்கள்ளி, விருதோடை, குசலை, தொடுவா(தொடுவாவ), மாயவன் ஆறு (தெதுறுஓய), முதலைப்பாளி, நுரைச்சோலை, இலந்தையடி, வண்ணாத்திவில்லு, அம்பலம், திகழி, இரணமடு (இரணவில), கொத்தாந்தீவு, முட்டிபாலக்குளம், பெரியகுளம் (மஹாவெவ), செம்புக்குழி, தலைவில்லு, மரவெல, கொக்குவில்(கொக்காவில), மாராவில், மானாவரி, பூந்தோட்டம், கீழ் பிராமணதளுவ, தீர்த்தக்கரை எனப் பல தமிழ்ப் பெயர் கொண்ட புத்தளம் மாவட்டக் கிராமங்களின் பூர்வீகப்பெயர்கள் சிங்களமயமாக்கப்படும் அவலநிலையில் இந்நூல் தமிழ்க்கிராமங்களின் பெயர்களையும் அவற்றின் சிறு வரலாற்றுத் தகவல்களையும் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61547).