எப்.எக்ஸ்.சி.நடராசா. மட்டக்களப்பு: எப்.எக்ஸ்.சி.நடராசா, 53, மத்திய வீதி, 1வது பதிப்பு, தை 1971. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தா மேடு).
(12), 165 பக்கம், வரைபடம், விலை: ரூபா 5., அளவு: 18×12.5 சமீ.
காரைநகர் மான்மியம்.
எப்.எக்ஸ்.சி.நடராசா. லண்டன்: காரை நலன்புரிச் சங்கம், இணை வெளியீடு, கனடா: காரை கலாச்சார மன்றம், 2வது பதிப்பு, ஜனவரி 2012, 1வது பதிப்பு, தை 1971. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xvi, 170 பக்கம், விலை: ரூபா 490., அளவு: 18×12.5 சமீ.
இடவிளக்கம், இயற்கைத் தோற்றம், பழைமை, புதுமை, சமயம், கல்வி, மடங்கள், காரைநகர்ச் சபைகள், இடப்பெயர் விளக்கம், பெருமக்கள், வகையுந் தொகையும் ஆகிய பதினொரு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. காரைநகர் (Karainagar) இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழக்கு, தெற்குத் திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது. பிரித்தானியரின் ஆட்சியில் (1869 இல்) அவ்வேளையில் அரசாங்க அதிபராக இருந்த துவைனம் துரையின் உதவியுடன் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்புத் தெருவின் நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். இங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங் குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் திண்ணபுரம் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரையும் உள்ளன. இந்நூல் காரைநகரின் சிறப்பையும் வனப்பையும் மாத்திரமல்லாது, அங்கு வாழ்ந்திருந்த பிரமுகர்கள், புலவர்கள், அங்கெழுந்த நூல்கள் என்பனவற்றையும் பதிவுசெய்கின்றது.