11978 கோணேஸ்வரம்: கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை.

செல்லத்துரை குணசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, ஜுலை 1973. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 126 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-468-3.

கோணேஸ்வரக் கோவிலின் தோற்றக்காலம் எது?, கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம், சோழராட்சிக் காலமும் அதற்குச் சிறிது பிற்பட்ட காலமும் ஆகிய மூன்று பிரதான அத்தியாயங்களில் இந்த ஆய்வு நூல் எழுதப்பட்டுள்ளது. கோணேஸ்வரக் கோயிலை மையமாகக் கொண்டு, கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட 15ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள காலப் பகுதியில் திருக்கோணமலை மாவட்டத்தில் காணப்பட்ட இந்துமதச் செல்வாக்கினையும் காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள், பண்பாட்டு அபிவிருத்திகள், திருக்கோணமலை மாவட்டத்தினைப் பாதித்த விதத்தினையும் எடுத்துக்கூறுகின்றது இந்நூல்.  இதன் அடிப்படையில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்ற காலத்தில் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் சோழராட்சியின் கூடுதலான பாதிப்புக்குள்ளானது திருக்கோணமலை மாவட்டமாகும் என்ற கருத்து முதன்முதலாகச் சான்றுகளுடன் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Premia Zbytnio Rejestrację Bez Depozytu

Content Bądź Darmowe Spiny Bez Depozytu Owo Najkorzystniejszy Nadprogram Na rzecz Naszych Graczy W całej 2024 R.? Tysięcy Złotych Po Nagrodach, W całej Kasynie Casinoeuro