குணரத்தினம் கோபிராஜ். யாழ்ப்பாணம்: அகில இலங்கை சேக்கிழார் மன்றம், சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கொம்பியூட்டர் வேர்ள்ட்).
xvi, 68 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலர் பிரிவு தொடர்பான தகவல்களை உள்ளடக்கி சண்டியூர் என்னும் நூல் எழுதப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேசத்திற்கானதொரு அறிமுகம், அங்கு வாழ்ந்திருந்த கற்றோரும் பிரமுகர்களும், அப்பிரதேசத்தின் கல்வி வரலாறு, மற்றும் அப்பிரதேசத்தின் சிறப்புக்குரிய இடிகுண்டுக் கிணறு, வழுக்கையாறு தொடர்பான பார்வைகள், இடப்பெயர்கள், குறிச்சிப் பெயர்கள் பற்றிய வரலாறு எனப் பல்வேறு பிரதேச வரலாற்று விடயங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. இவை அனைத்தும் சண்டிலிப்பாய்-ஓர் அறிமுகம் (யாழ்ப்பாணம்-விளக்கம், சண்டிலிப்பாய்-அமைவிடம், சண்டிலிப்பாய் -பெயர் விளக்கம், சமூகப் பிரிவுகள், நீர்வளம், சண்டிலிப்பாயும் அயற் கிராமங்களும்), சண்டிலிப்பாய் ஆலயங்கள் (சிவாலயங்கள், அம்மன்ஆலயங்கள், விநாயகர் ஆலயங்கள், வைரவர் ஆலயங்கள், ஐயனார் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், முருகன் ஆலயங்கள்), சான்றோர்களும் சண்டிலிப்பாயும் (கதிரவேலு சிறாப்பர், கம்பவாருதி ஜெயராஜ், அபிமன்யு, வினோதன்), சண்டிலிப்பாய் பிரதேச பண்பாட்டுக் கோலங்கள், பின்னிணைப்பு ஆகிய ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 244261).