யதார்த்தன், பிரிந்தா (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: தொன்ம யாத்திரைக் குழுமம், விதை குழுமம், அக்கினிச் சிறகுகள், 1வது பதிப்பு, பங்குனி 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
தொன்ம யாத்திரை இதழின் இரண்டாவது இதழ் ஊர்காவற்றுறை பற்றிய வரலாற்றுத் தேடலாக அமைந்துள்ளது. தீவகத்தின் மையங்களில் ஒன்றான ஊர்காவற்றுறையினை தொன்ம யாத்திரைக்கான இடமாகத் தெரிவுசெய்து அதனைப் பற்றிய ஆய்வுகளை தொன்ம யாத்திரைக் குழுமம் மேற்கொண்டுள்ளது. ஆச்சரியமும் சோகமும் நிரம்பிய வரலாற்றைக் கொண்ட இந்த நிலத்தில் நாம் சமகாலத்தில் அவதானிக்க வேண்டியதும் அவசரமாகக் கவனத்தைக் குவிக்க வேண்டியதுமான பிரச்சினைகளைப் பற்றிய சிறு அறிமுகம் இதுவாகும்.