கலைவாணி மோகன்ராஜ். நெடுந்தீவு: கலாசாரப் பேரவையும் நெடுந்தீவு பிரதேச செயலகமும், 1வது பதிப்பு கார்த்திகை 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
(6), 102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.
தான் பிறந்த மண்ணாகிய நெடுந்தீவின் இலக்கிய வளங்கள், ஈழத்து இலக்கியத் தடத்தில் பிரகாசிக்க வேண்டுமென்ற ஆவலில் இவ்வாய்வை மேற்கொண்டுள்ள கலைவாணி, பல்துறை சார்ந்த இலக்கியங்களையும் இலக்கியப் படைப்பாளிகளையும் விமர்சனரீதியில் அணுகியுள்ளார். இவர்களின் படைப்புக்களில் பல்வேறுபட்ட பாடுபொருள்கள் பொதிந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்புக்களை வளர்ப்பதிலும் எடுத்துரைப்பதிலும் உறுதுணையாக நின்ற அறிஞர்களுள் இத்தீவின் மைந்தர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளனர். இவர்களோடு பல இளம் எழுத்தாளர்களும் இலக்கிய உலகில் பிரகாசிக்கின்றனர். இவர்களின் ஆளுமைகளும் தேடல்களும் இவ்வாய்வில் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.