கானா பிரபா. அவுஸ்திரேலியா: மடத்துவாசல் பிள்ளையாரடி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (அவுஸ்திரேலியா: தமிழ் அவுஸ்திரேலியன், 5/128, Pendle Way, Pendle Hill, NSW 2145).
106 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-0-646-93506-5.
உலகில் தென்கிழக்காசியா வரையில் விரிந்திருந்த சமயம் சைவ சமயமாகும். இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான பாலியில் 85 சதவீதத்தினர் இந்துக்கள். இந்நூல், இந்தியா-இந்து சமயம் என்பனவற்றுக்கும், இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கும் இடையிலான தொடர்பை ஆய்வுசெய்கின்றது. இதுவொரு பயணக்கட்டுரை மாத்திரமல்லாது, பாலித்தீவின் வரலாறு, சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம் ஆகியவற்றை கி.பி.914 முதலான வரலாற்றாதாரங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது. பாலித்தீவை ஆண்ட கேசரி வர்மன், தபேனேந்திர வர்மதேவன், சிங்கவர்மதேவன், உதயணன் போன்ற மன்னர்களின் பெயர்கள் இந்தியத் தொடர்பை உறுதிசெய்கின்றன. சிட்னியில் இருந்து பாலித்தீவுக்குப் பயணிக்கும் எம்மவர்கள் எவ்வழியாகச் செல்லவேண்டும். பணத்தைச் சிக்கனமாகச் செலவிடும் அறிவுரைகள், விமான நிலைய கட்டுப்பாடுகள், பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள் என்பன பற்றிய பயனுள்ள குறிப்புகளுடன் இந்நூல் வெளிவந்தள்ளது. கானா பிரபா, அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வாழும் ஊடகவியலாளர். மடத்துவாசல் இணையத்தளத்தினை நடத்தி வருபவர். சிட்னியில் 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு நிலையமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஊடகவியலாளராக கடமையாற்றுகின்றார்.