மலர்க் குழு. பூநகரி: பூநகரி பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், ஆனைப்பந்தி).
xix, 161 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
பூநகரி பிரதேச கலாசாரப் பேரவை 2014இல் நடத்திய கலாசார விழாவையொட்டி வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மலர்க்குழுவில் ச.சத்தியசீலன் (பிரதேச செயலர்), திருமதி றஜனி நரேந்திரா (கலாசார உத்தியோகத்தர்) ஆகியோருடன் கலாசார பேரவை உறுப்பினர்களான சி.சூரியதாசன், கோ.கோகிலரதன், ஞா.போல் அன்ரன், செ.சுரேந்திரா, திருமதி சி.சிவசக்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இம்மலரில் பூநகரிப் பிரதேசப் படைப்பாளிகளின் ஆக்கங்களையும் இப்பிரதேசத்தின் தொன்மை வரலாற்று, கலாசார விழுமியங்கள் பற்றிய தகவல்களையும் தொகுத்திருக்கிறார்கள். பூநகரி வளங்களும் அபிவிருத்தியின் சவால்களும், பூநகரி தொன்மையும் பெருமையும் அடையாளப்படுத்தி நிற்கும் சோழர்கால மண்ணித்தலை சிவாலயம், போர் பாதித்த பிள்ளைகளும் பெற்றோரின் நிலைமாற்ற வகிபாகமும்-சில கொள்கைரீதியான புரிதல்கள், ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பொருத்தமான போதனாமொழி, பன்மைத்துவப் பண்பாட்டினுள் தமிழர் தம் தனித்துவங்களையும் அடையாளங்களையும் தக்கவைத்துக் கொள்ளல், அருகிவரும் பண்பாட்டில் பூநகரி வடக்கு மக்களும் வாழ்வியலும் பூநகரே உந்தன், ஈழத்தில் தமிழின் தொன்மையைப் புலப்படுத்தும் பிராமி சாசனங்கள், புனித அந்தோனியாரும் பாலைதீவும் ஒரு கோணத்தில், கண்ணகி படைப்பில் காட்சிப்படுத்தப்படும் மர்மங்கள், பாரம்பரிய வாழ்வியலில் நம்பிக்கைகள், சாணக்கியம், கவிபடி- புதுக்கலை வடி, இடைக்காலத்தில் வட இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான வணிக உறவு-தொல்லியல் நோக்கு, ஒற்றைப் பனம் தோப்பு, மனிதர்களிடம் மறைந்து போனவை, நாட்டார் வழக்காற்றும் பூநகரியும், பூநகரி பிரதேசத்தில் நெல் வேளாண்மையுடன் தொடர்புடைய சொற்கள், பூநகரிக் கோட்டை வரலாறு, பெண்ணே நீ எழுந்திரு, தனித்துவத்தில் பூநகரி, பூநகரி பிரதேச கடற்தொழில்-ஒருகண்ணோட்டம், பூநதரியில் பொம்மையாட்டம், பூநகரி பிரதேச நீர்நிலைப் பயன்பாட்டு முகாமைத்துவம், முஸ்லிம் தனியார் சட்டம், பூநகரியின் புராதன மருத்துவம், இது எப்படி இருக்கு, உண்டு பாருங்கள் பூநகரி பக்குவத்தை, கலைநகரி விருது, வாசகர்களே நீங்கள் எவ்வகையினர் ஆகிய 33 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் எனப் பல்வேறு படைப்புக்கள் இம்மலரில் தொகுக்கப்பட்டுள்ளன.