ஆ.மு.ஷரிபுத்தீன்(மூலம்), ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (பதிப்பாசிரியர்). மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 361, ½, டாம் வீதி).
xviii, 142 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0122-00-4.
புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள் எழுதிய நூல். இந்நூல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு கரையோர இசுலாமியக் கிராமமான மருதமுனையின் வரலாற்றைக் கூறுகின்றது. இது வடக்கே பெரிய நீலாவணையையும் , கிழக்கே இந்துப் பெருங்கடலையும் தெற்கே பாண்டிருப்பு கிராமத்தையும் எல்லையாகக் கொண்டது. இக்கிராமம் எப்படி உருவானது? இங்கே குடியேறியோர் எப்படி, எக்காலத்தில் குடியேறினார்கள்? அவர்களுடைய நடை, உடை, பாவனைகள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள், அவர்கள் பேசிய மொழி, அவர்களது சுற்றாடல், நம்பிக்கைகள், பின்பற்றிய மதம், மத அடிப்படையில் இருந்த அவர்களது ஆண்-பெண் உறவுகள், அவர்களுடைய தொழில் என்று பல்வேறு தகவல்களை வழங்குகினறது. மேலும் இந்நூல் இக்கிராமத்தின் வளர்ச்சி, மக்களின் கல்வித்தரம், கல்வியில் எற்பட்ட வளர்ச்சி பற்றியும் கூறுகின்றது. இது ஒரு பிரதேசத்தின் சமூக வரலாற்றை பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54194).