வல்வை ந.அனந்தராஜ். பருத்தித்துறை: கலாசாரப் பேரவை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).
xii, 143 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 550., அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-955-41846-1-9.
வல்வெட்டித்துறைப் பிரதேச வரலாற்றில் நினைவுகூரப்படவேண்டிய முதுசொம்கள் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. வல்வெட்டித்துறையும் நகராட்சி மன்ற வளர்ச்சியும், அருள் ஒளி பரப்பும் வல்வையின் சில ஆலயங்கள், பூம்புகாரை நினைவூட்டும் வல்வையின் இந்திரவிழா, வல்வெட்டித்துறையின் கல்வி பண்பாட்டுப் பாரம்பரியம், அறிஞர்கள் மகான்களால் வாழ்த்தப்பட்ட வல்வை நகரம், ஆழநீர் தேங்கி நிற்கும் தீருவில் புட்கரணிக் குளம், துறைமுக அபிவிருத்தியும் கடலோடிப் பாரம்பரியமும், கப்பல் ஓட்டிய தமிழர்கள், சுற்றுலாத் தலங்களும் வரலாற்று முக்கியத்துவமுள்ள கட்டடங்களும், சாதனையாளர் வரிசையில் வல்வையின் மைந்தர்கள், உயிர்காக்கும் இந்திராணி வைத்தியசாலை-1947, ஈழத்தமிழர்களின் அரசியல்வாழ்வில் வல்வையின் பங்கு, வல்வெட்டித்துறையின் சிறப்புவாய்ந்த உணவுகள், பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த தட்டிவான்கள், வல்வையின் பாரம்பரிய கலை, பண்பாட்டு வடிவங்கள், பண்பாட்டைச் சீரழிக்கும் மதுபானசாலைகளே இல்லாத நகரம் 1994-2012, வல்வெட்டித்துறை அபிவிருத்தியும் பிரஜைகள் குழுவும், வரலாற்று ஆவணக் காப்பகம், வரலாற்றின் மறக்கமுடியாத சில நினைவுகள், வழக்கிலிருந்து அருகிவரும் முதுசொம்கள், வல்வை எழத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஆய்வுநூல்கள் ஆகிய 21 தலைப்புகளில் இவ்வாவணம் தொகுக்கப்பட்டுள்ளது.