11992 வன்னிப் பிரதேச வயற் பண்பாடு.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (வவுனியா: மல்ட்டி விஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

236 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-8715-97-0.

வன்னி பற்றியும் வன்னி மாவட்டம் பற்றியும் அகளங்கன் எழுதிய 13 அத்தியாயங்கள் அடங்கிய தொகுப்பு இது. வரலாறும் வாழ்வும், வயற் பண்பாடு, நெற்செய்கை, குளத்து மீன்வளம், வேட்டை, கிராமிய வழிபாடு, கிராமியத் திருமண நடைமுறைகள், நாட்டார் பாடல்கள், நாட்டார் பாடல்களில் கல்விச் சிந்தனை, கிராமிய விளையாட்டுகள், பண்டிப் பள்ளும் குருவிப் பள்ளும், வவுனியா மாவட்டத்தில் கல்வி, வவனியா மாவட்டத்தில் கலை இலக்கியம் ஆகிய தலைப்புகளில் இவை அமைந்துள்ளன. வன்னியின் இன்றைய தலைமுறைக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் வன்னி மண்ணைச் சாராதவர்களுக்கும் வன்னியின் மூதாதையரின் வாழ்வைத் தெரிவிப்பவையாக இக்கட்டுரைகள் அமைகின்றன. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில்  2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த துறைசார் நூலுக்கான பரிசை வென்ற நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 243328). 

ஏனைய பதிவுகள்

14826 காற்சட்டை அணியும் பெண்மணி: சீனக் குறுநாவல்.

வாங் நுன்சி (சீன் மூலம்), ந.சுரேந்திரன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: நதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1986. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 20×13.5 சமீ. நான்கு