வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: பழைய மாணவர் சங்கம், வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம், வெல்லாவெளி, 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்).
194 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ.
மூன்று இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாவது இயலான வரலாறு என்பதன்கீழ், வெல்லாவெளி அறிமுகம், பெயர்க் காரணம், மக்கள் குடியிருப்புக்கள், வெல்லாவெளி வரலாற்றுச் சிறப்பு, வரலாற்றுத் தடயங்கள், நாதனை ஆற்றின் வளம், காலத்துக்குக் காலம் ஏற்பட்ட வெல்லாவெளி மக்களின் இடப்பெயர்வுகள், கல்வி வளர்ச்சி, அரச அலவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள், வெல்லாவெளி பொது அமைப்பகளும் கழகங்களும் ஆகிய 10 உப தலைப்புகளின் கீழ் இப்பிரதேசத்தின் வரலாறு பதிவுசெய்யப்படுகின்றது. வழிபாடும் பண்பாடும் என்ற இரண்டாம் இயலில் வழிபாடு, பண்பாடு ஆகிய தனித்தனிப் பிரிவுகளின் கீழ் அவ்வூர் மக்களின் மத வழிபாட்டு நம்பிக்கைகள் தனித்துவமான பண்பாடு என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. பண்பாட்டுச் சொந்தக்காரர்கள் என்ற இறுதி இயலில் ஊர்ப்பெரியவர்கள் (நினைவில்), ஊர்ப் பெரியவர்கள் (நிகழ்வில்), கலைஞர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், அரச-தனியார் துறை அலுவலர்களும் மற்றும் துறைசாராப் பணியாளர்களும் ஆகிய தலைப்புகளின்கீழ் ஊர்மக்களின் நினைவும் நிகழ்வும் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53613).