V.A.T. ராஜன். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1953. (சென்னை 19: கலைமகள் அச்சகம், காலாடிப்பேட்டை).
92 பக்கம், விலை: ரூபா 1.40, அளவு: 18×12.5 சமீ.
இந்நூல், படிப்போருக்கு நன்கு புலனாகும்படி எளிய நடையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வெட்டுக்காயம், குத்துக்காயம், கண்டமாலை, பவுத்திரமூலம், கன்னப்புற்று முதலிய புற்றுரோகங்கள், அறையாப்பு முதலிய பெண்கள் ரோகங்கள், ஆறாத புண்கள், புரையோடும் இரணங்கள், கரப்பான், சொரி சிரங்கு, முதலிய சகல இரணங்களையும் குணப்படுத்தும் வழிவகைகளை இங்கு காணமுடிகின்றது. மேற்குறித்த ரணங்களை குணமாக்கவல்ல பிளாஸ்திரி, களிம்பு, லிண்டு, லோஷன், பற்றுக்கள் முதலியவற்றை இலகுவாக அனைவரும் செய்துகொள்ளும் வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. சென்னை முத்தியாலுப்பேட்டை ஏ.யு.வு. ராஜன் அவர்களால் எழுதப்பெற்று கொழும்பில் பதிப்பிக்கப்பெற்றுள்ள இந்நூல் போன்று மேலும் பல நூல்கள் சரஸ்வதி புத்தகசாலை, கலாநிலையம் போன்ற இலங்கைப் பதிப்பகங்களால் ஐம்பதுகளில் வெளியிடப்பட்டுள்ளமை ஈழத்துப் பதிப்புலக வரலாற்றை ஆய்வு செய்ய முனைபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தியாகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26805).