கண.குறிஞ்சி, ராஜ் இருதயா. தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், அஷோக் நகர்).
48 பக்கம், விலை: இந்திய ரூபா 25., அளவு: 21.5×14 சமீ.
போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் தமிழீழப் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இலங்கை அரசு தொடர்ந்து செய்துவருவதை 2009 மே 18, 19இற்குப் பின்னர் தமது துணிச்சலும் ஆபத்தும் மிக்க நேரடிப்பயண அனுபவங்களினூடாகக் கண்டறிந்து அதனை 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு நேர்காணலின் வாயிலாக தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி அவர்களும், பேராசிரியர் ராஜ் இருதயா அவர்களும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்கள். லண்டன், குளோபல் தமிழ் நியூஸ் நெட்வேர்க் குழுமத்தினரால் ஒலிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, பின்னர் எழுத்துருவில் அவர்களது இணையத்தளத்திலும், தினகரன் நாழிதளிலும் வெளியிடப்பட்டது. இந்நேர்காணல்களின் முழுமையான தொகுப்பே இந்நூலாகும். லண்டன், குளோபல் தமிழ் நியூஸ் நெட்வேர்க் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான நடராஜா குருபரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோரின் முயற்சியினால் இந்நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.