செ.துரைசாமி. சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை).
229 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 115.00, அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-81-8476-572-4.
1991 மே 21 ம் திகதி ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொலைசெய்யப்பட்டதன் பின்னர் சி.பி.ஐ மேற்கொண்ட விசாரணைகளில் உள்ள நியாயத்தன்மைகளை கேள்விக்குள்ளாக்கும் நூல். நூலாசிரியர் வழக்கறிஞர் செ.துரைசாமி, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தீராவிடர் கழகத்தின் செயற்பாட்டாளரானவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆஜரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் உள்ளார். இந்நூல் 1991 மே 21இல் நடந்தது என்ன?, குற்றப் பத்திரிகை கூறுவது என்ன?, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சிகள் கூறியது என்ன?, நீதிமன்ற விசாரணை, வழக்கின் விசாரணை தாமதமானது ஏன்?, முறையற்ற குற்றச்சாட்டு, விடை தெரியாத மர்மங்கள், சட்டம் தெரியாமை, 19 குற்றவாளிகளும் பின்விளைவுகளும், நியாயமற்ற தண்டனை, மனித வெடிகுண்டு, மறைக்கப்பட்ட உண்மைகள், பெங்களுரு காவல்துறையின் புலன் விசாரணை, ரகோத்தமனின் புத்தகம், குற்றவாளிகளிடமிருந்து வாக்குமூலம் எப்படி வாங்கப்பட்டது?, நீதிபதி ஜெயின் ஆணையத்தின் விசாரணை-ஓர் அறிமுகம், தவறான புலன் விசாரணை ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.