த.பிரியா. கோயம்புத்தூர் 641 029: தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஞானாம்பிகை ஆலை அஞ்சல், 1வது பதிப்பு, ஜுலை 2016. (கோயம்பத்தூர் 29: பிரடாக் பிரின்ட், 476 பூமாதேவி கோவில் அருகில், கவுண்டர் மில்ஸ் அஞ்சல்).
(26), 228 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-93-80800-72-1.
தனது முனைவர் தகுதிப் பட்டத்திற்காக, லண்டனில் வாழும் ஈழத்துப் படைப்பாளி இராஜேஸ் பாலாவின் எட்டு நாவல்களை ஆராய்ந்து அவற்றினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல்களை ஆய்வு செய்துள்ளார் முனைவர் த.பிரியா. அவ்வகையில் ஒரு கோடை விடுமுறை, உலகமெல்லாம் வியாபாரிகள், தேம்ஸ் நதிக் கரையில், பனி பெய்யும் இரவுகள், வசந்தம் வந்து போய்விட்டது, தில்லையாற்றங்கரை, அவனும் சில வருடங்களும், நாளைய மனிதர்கள் ஆகிய எட்டு நாவல்கள் இவ்வாய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தோற்றுவாய்/புலம்பெயர்வும் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும்/ பெண்-உறவு-குடும்பம் சார்ந்த சிக்கல்கள்/ இலங்கை வாழ்வுரிமைப் போராட்டங்கள்/ இங்கிலாந்து மற்றும் உலகளவில் வாழ்வியல் போராட்டங்கள்/ பண்பாட்டுப் பதிவுகளும் மாற்றங்களும்/ நிறைவுரை ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.