12003 – விவேகப் பரீட்சைகளும் பொது அறிவும்

ஏ.யு.யோண்பிள்ளை. இளவாலை: ஏ.யு.யோண்பிள்ளை, தலைமை ஆசிரியர், இளவாலை கன்னியர் மட ஆசிரியர் கழகம், 1வது பதிப்பு, 1939. (யாழ்ப்பாணம்: புனித ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).
162 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ.


நூலாசிரியர் தனது 15 ஆண்டுகால ஆசிரிய கலாசாலை ஆசிரியத்துவ அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தான் கண்டறிந்த பரீட்சை வழிவகைளைப் பயன்படுத்தி இந்நூலை ஆக்கியுள்ளார். விவேகப் பரீட்சையும் அதன் வரலாறும், விவேகத்தை மட்டிடுதல், கற்பனைப் பரீட்சைகள், ஒப்புநோக்கும் பரீட்சைகள், பதார்த்தப் பரீட்சைகள், வசன அர்த்தப் பரீட்சைகள், வாக்கியம் ஒழுங்குசெய்தல், கணிதவகைப் பரீட்சைகள், உயர்தரக் கணிதவகை, கணித கடவகை, தருக்கப் பரீட்சை, நியாய விரோதப் பரீட்சை, நியாயப் பிழைகள் காணல், தருக்கத் தெரிவுப் பரீட்சைகள், சாதாரண நியாயித்தல், படப் பரீட்சைகள், பொதறிவுப் பயிற்சி, பொதறிவு வினாக்கள், பொதறிவு வினாக்களின் விடைகள் ஆகிய 19 அத்தியாயங்களில் விவேகப் பரீட்சைகள்ஃபொது அறிவு பற்றி விளக்கியுள்ளார். விளக்கப்படங்களாக விவேக பரிசோதனை பீடம், எண்ணூடாட்டம், பரப்பளவை வடிவங்கள், எதிர்நோக்குச் சொட்டெண், நட்சத்திர நிலைகள், கணித விகடப்படங்கள், கணிதக் கயிறிழுப்பு, படப் பரீட்சைகள், டெல்ற்றா ஆற்றிடை மேடு, இலங்கையின் வெட்டுமுகம், அமெரிக்காவின் ஆகாய விமான பாதை, மழைமுகம்ஃமழை நிழல் ஆகியன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2250).

ஏனைய பதிவுகள்

12239 – சர்வதேச அரசியல் பிரச்சினைகள்: மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு.

க.சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 108 பக்கம்,

12285 – அமைதியான சமாதானத் தூதுவர்: ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்.

எஸ்.சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்), பீ.எஸ்.சர்மா (தமிழாக்கம்). பத்தரமுல்ல: ஸ்ரீலங்கா யுனெஸ்கோ தேசிய சபை, இசுருபாய, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம். 21 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×24.5 சமீ.