12005 – ஈழத்தித்தின் தமிழ்க் கவிதையியல் : ஒரு நூல்விபரப் பட்டியல்.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). பிரித்தானியா: ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகமும் ஆய்வகமும், 14, Walsingham Close, Luton LU2 7AP, இணைவெளியீடு, அயோத்தி நூலக சேவைகள்- ஐக்கிய இராச்சியம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு 6, 1வது பதிப்பு, மார்ச் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xl,999 பக்கம், விலை: ரூபா 3850., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-659-586-4. இந்நூல் ஈழத்தின் தமிழ்க் கவிதையியல் தொடர்பான விரிவானதொரு நூல் விபரப்பட்டியலாக அமைகின்றது. ஈழத்துத் தமிழ்க் கவிதைப்புலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்களின் பார்வைக்கு போதிய நூல்கள் சென்றடைவதில்லை என்பது யதார்த்த நிலையாகும். கைக்கெட்டிய தூரத்தில் இருப்பதைக்கொண்டு தமது ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய நிலையிலேயே எமது ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். இந்நூல் இந்நிலைமையைக் கருத்திற் கொள்கின்றது. அவர்களுக்கு ஈழத்துத் தமிழ்க் கவிதைப்புலத்தின் விரிவானதொரு பிரதேசத்திற்கு முடிந்தவரையில் ஒளியைப் பாய்ச்சி நிற்கின்றது. ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளை இந்நூல் முடிந்தவரையில் ஆண்டுவாரியாக ஒழுங்குபடுத்தித் தருகின்றது. நூலியல் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் எம்மவர்கள் காட்டும் அக்கறையின்மை காரணமாக பல நூல்கள் வெளியிட்ட ஆண்டுவிபரமில்லாமல் பிரசுரமாகியுள்ளன. அவை இறுதி யாக இப்பட்டியலில் பதிவுக்குள்ளாகியுள்ளன. இந்நூலில் காணப்படும் நூல்கள் அனைத்தும் நூல்தேட்டத்தின் பன்னிரு தொகுதிகளிலும் வெளிவந்த பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. நூல்தேட்டத்தின் பன்னிரு தொகுதிகளிலும் உள்ள நூல்கள் எவையும் ஆண்டுவாரியாகப் பதிவுசெய்யப்பட வில்லை. அனைத்தும் தேடலில் கிடைத்த ஒழுங்கிலேயே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளன. இந்நூலில் அக்குறையை நிவர்த்திசெய்ய நூலாசிரியர் முனைந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Asia Mystery On the internet Slot

Content Greatest Video Slots To experience On line | calssic 6 reel slots Wheel Out of Luck On the Trip Slots Possibilities to Win Information