12006 – ஒரு நூலின் மகத்துவம்: தரமான நூலொன்றை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறைகள்.

புஷ்பகுமார விதானகே (சிங்கள மூலம்), லறீனா அப்துல் ஹக் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 61 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5ஒ14.5 சமீ., ISBN: 978-955-659-569-7.

அழகும் நேர்த்தியும் கொண்ட தரமான நூலொன்றை உருவாக்குவதற்கான வழிமுறைகளை இந்நூல் வழங்குகின்றது. நூலின் முதற் பக்கங்கள், நூலின் உள்ளடக்கம், நூலின் பின்பக்கங்கள், நூலின் கட்டமைப்பு ஆகிய நான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் முதலாவது அத்தியாயம், நூலொன்றின் முன்பக்கங்களில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் தொடர்பாகவும், இரண்டாவது அத்தியாயம், நூலின் உள்ளடக்கத்தின் தரத்தினை நிர்ணயிப்பதில் கவனத்திற் கொள்ளவேண்டிய அம்சங்கள் குறித்தும் வாசகருக்குத் தேவையான வழிகாட்டலை பெற்றுத்தருகின்றது. மொழிநடை, சொற்றொகுதி, உறுதிப்பாடு எனும் அம்சங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அத்தியாயத்தில் உள்ளடக்கத்தோடு பொருந்தும் வகையில் இணைக்கப்பட வேண்டிய பின் பக்கங்கள் யாவை என்பது பற்றித் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளது. நான்காவது அத்தியாயத்தில் பௌதீக ரீதியில் ஒருநூல் சக்திவாய்ந்ததாக, நீண்டகால இடையறாத பாவனைக்கு ஏற்ற வகையில் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியும் சர்வதேசத் தரநிர்ணய நியமங்களுக்கு அமைவாக அதனை எவ்வாறு அச்சிடுவது என்பது குறித்தும் உரிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவையினைச் சேர்ந்த புஷ்பகுமார விதானகே, கல்வி அமைச்சின் பாடசாலை நூலக அபிவிருத்திப் பிரிவில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார். கொழும்பு இசிப்பத்தான கல்லூரியின் முன்னாள் அதிபரான இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியியல் முதுமாணிப் பட்டத்தினையும் நூலகவியல் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்