தமிழ்நூல் வெளியீட்டு விநியோக அமையம். கொழும்பு 11: தமிழ்நூல் வெளியீட்டு விநியோக அமையம், இல.4, 3வது தளம், C.C.S.M. கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, ஜுன் 1995. (சென்னை 14: வே.கருணாநிதி, பார்க்கர் கம்பியூட்டர்ஸ்). 76 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 3.00, அளவு: 20.5×13 சமீ. கொழும்பு தமிழ்நூல் வெளியீட்டு விநியோக அமையமும், யாழ்ப்பாணம், வசந்தம் புத்தக இல்லமும், தமிழ்நாடு- சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட குறிப்புரையுடனான வர்த்தக நூற்பட்டியல் இதுவாகும். தாம் விநியோகிக்கும் நூல்கள் பற்றிய குறிப்புரையுடன் கூடிய நூற்பட்டியலாக நூலின் அட்டைப்படத்தையும் இணைத்து இந்நூலை வெளியிட்டிருந்தார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17607).