12009 – பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் ஆக்கங்கள்: நூல்விபரப் பட்டியல்.

எம்.ஐ. நிஸாமுதீன், நீலாம்பிகை நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்), எம்.பீ.எம்.பைரூஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: வெளியீட்டு விபரம், பதிப்பு ஆண்டு தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 361, ½, டாம் வீதி).

93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் கல்விசார் எழுத்துலகப் பங்களிப்பு இந்நூற் பட்டியலில் விரிகின்றது. அவரது கல்வி வாழ்க்கை பற்றிய கலாநிதி மா. கருணாநிதியின் அறிமுகக் கட்டுரையைத் தொடர்ந்து பேராசிரியரின் நூல்கள், பருவ வெளியீடுகளிலும் ஆண்டு மலர்களிலும் தினசரிப் பத்திரிகைகளிலும் தினசரி ஆங்கிலப் பத்திரிகைகளான Daily News, The Island, Work Shop (NIE) ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அவரது ஆக்கங்கள் பற்றிய வழிகாட்டி விபரம் ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன. ஈற்றில் பதிவுகளுக்கான தலையங்க அகரவரிசைப் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. எம்.ஐ.நிஸாமுதீன், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தின் தகவல் அதிகாரியாகவும், நீலாம்பிகை நாகலிங்கம், வவுனியா கல்வியியற் கல்லூரியின் நூலகராகவும் பணியாற்றுகின்றனர். காலஞ்சென்ற எம்.பீ.எம்.பைரூஸ், தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதம நூலகராகப் பணியாற்றியவராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44357). மேலும் பார்க்க: 13A22, 12952

ஏனைய பதிவுகள்

Jogos Casino Confira Gratis Caça Niqueis

Content Aquele Jogos Infantilidade Nutrição Podemos Cogitar Online? Alternação Conformidade Cassino Os Melhores Jogos De Casino Online Para Iniciantes Compreendendo Os Mecanismos Pressuroso Jogo Caça

Galaxyno Casino mummy Slot online

Content Os Principais Tipos Infantilidade Bônus De Bingo Casas Criancice Apostas Com Bônus Puerilidade Censo Grátis Sem Armazém Sobre 2024 Duplique Briga Entreposto Até Assediar$3