தி.ஞானசேகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
104 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 25.5ஒ18 சமீ., ISBN: 2478-0340.
ஞானம் சஞ்சிகையின் 215ஆவது இதழ் (ஒளி 18, சுடர் 11. ஏப்ரல் 2018) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துலகின் அறுபதாண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. எக்ஸ் தந்த நேர்காணல் (அ.முத்துலிங்கம்), அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகப் பிரவேசம் (எஸ்.ஜெபநேசன்), எல்லைகளற்று விரியும் இலக்கியத்தின் தனித்தமிழ்ப் பிரதிநிதி அ.முத்துலிங்கம் (தெளிவத்தை ஜோசப்), உலா ஊர்தி- அ.முத்துலிங்கம் கட்டுரைகளை வாசித்த அனுபவம் (ப.சரவணன்), ஆண்டுவட்டத்தைக் கடந்ததொரு இலக்கியப் பயணம்: அ. முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணம் பற்றியதொரு பதிவு (என்.செல்வராஜா), ஊர்வலம் (அ.முத்துலிங்கம் 1958இல் எழுதிய முதற் கதை), ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளும் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் (செ.யோகராசா), அ.முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்-ஒரு பார்வை (சு.குணேஸ்வரன்), எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள்: நயக்கவும் வியக்கவுமாய் நகர்த்திடும் லாவகம் (அன்னலட்சுமி இராசதுரை), ஈடிணையில்லாக் கதைசொல்லி (சோ.பத்மநாதன்), அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றிய குறிப்புகள் சில (வ.ந.கிரிதரன்), உங்களுடன் வந்தவர் (அ.முத்துலிங்கம்), உவமானம் 10 உவமேயம் ஸ்ரீ அ.முத்துலிங்கம் 10 60 (வி. ஜீவகுமாரன்), தமிழ் இலக்கிய உலகின் கதைசொல்லி அ.முத்துலிங்கம் (லெ. முருகபூபதி), அ.முத்துலிங்கம் கதைகளில் தொன்மம்: சில குறிப்புகள் (சின்னராசா குருபரநாத்), அ.முத்துலிங்கம் சுயவிபரக் குறிப்பு ஆகிய கட்டுரைகளுடன், ஞானத்தின் வழமையான பத்திகளும், கதை கவிதை ஆக்கங்களும் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.