12014 – ஈழநாதம்: 1வது ஆண்டு மலர்.

பொ.ஜெயராஜ் (ஆசிரியர்), செ.இளங்கோ (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: ஈழநாதம் அலுவலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ.

19.2.1990 அன்று தனது முதலாவது இதழை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுவைத்த ‘ஈழநாதம்’ பத்திரிகை 19.2.1991அன்று தனது முதலாம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடிய வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பிதழ் இது. யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தர், பேராசிரியர் அ.துரைராசா அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் தொடங்கும் இவ்விதழின் ஆக்கங்கள் இதயமென (கோ.மகேந்திரராசா), அனுபவம் வாய்ந்த ஆசான் (எஸ்.எம்.கோபாலரத்தினம்), பெருமகிழ்வுடன் (பொ.ஜெயராஜ்), ஆயிரம் வருடம் வாழ்வாய் (புதுவை இரத்தினதுரை கவிதை), எமது ஒரு வருடம் (செ.இளங்கோ, நிர்வாகி, ஈழநாதம்), எமது இலக்கு (ஆசிரியர்), ஈழநாதம் ஓர் ஆண்டு இதழ்கள்: ஒரு விமர்சனக் கண்ணோட்டம் (மு. பொன்னம்பலம்), எழுதுகோல் ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் (ஏ.ஜே. கனகரட்னா), ஈழநாதம் வெளியிட்ட செய்தி விபரணக் கட்டுரைகள் ஒரு பார்வை: (பொ.பாலசுந்தரம்பிள்ளை), ஊடுருவி நெருடும் சித்திரங்கள் (எஸ்.சிவஞானசுந்தரம்), பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரமும் தமிழ் மக்கள் பலியாகிய விதமும் (மு.திருநாவுக்கரசு) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018460). மேலும் பார்க்க: 12287, 12897, 12971 100 மெய்யியல்துறை 100 மெய்யியல் (தத்துவவியல்)

மேலும் பார்க்க: 12287, 12897, 12971

ஏனைய பதிவுகள்

Roulette un emplacement rocky brin

Aisé Emplacement rocky | Rendez les grands emploi pour roulette de y Quel continue le plus bas casino du chemin allemand concernant le blackjack ?