வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீனித்தம்பி கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143ஃ23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, ரு.பு.50U.G.50, People’s Park).
xxii, 90 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42694-3-9.
பிரபஞ்சம் பற்றிய முன்மொழிவு, பிரபஞ்ச தத்துவம், கடவுள் கொள்கையும் கோட்பாடும், மனிதனும் மனமும், இயற்கையும் மனித சமூகமும், நாம் யார், மதமும் மனிதனும் மாற்றங்களும், சிந்தனையும் செயல்பாடும், நம்பிக்கையும் அவநம்பிக்கையும், அறிவும் சிந்தனையும், மனதும் புத்தியும், போகவாழ்வும் காமநெறிமுறைகளும், வெற்றியும் தோல்வியும், ஆவி பற்றிய சிந்தனைகள், முழுமையை நோக்கி நாம் ஆகிய 15 அத்தியாயங்களில் பிரபஞ்சமும் வாழ்வியலும் பற்றிய ஆசிரியரின் ஆன்மீகக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 12ஆவது மனுவேதா வெளியீடாக வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261516CC).