12016 – அக நூல்.

சு.சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம்: சு.சிவபாதசுந்தரம், கந்தவனம், புலோலி, 1வது பதிப்பு, ஐப்பசி 1935. (சென்னை: புரோகிரசிவ் அச்சுக்கூடம்).

(7), 232 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.

இந்நூல் மனிதர் இயல்பைக் கூறுவதால் யாவருக்கும் பயன்படக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சிறுவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் சிறுவர்களின் பெற்றோருக்கும் ஏற்றவகையில் விளக்கப்பட்டுள்ளது. பிரவேசம் (அகநூலின் அகலம், பயன், ஆதார விதி, ஆக்கமுறை), தேவைகள் (தேவைகளின் வகை, தேவைகளின் கலப்பு, தேவைகளின் விரிவு, தேவைகளின் ஒடுக்கம் -பற்றுக்கள்), ஊக்கங்கள் (தேவையும் ஊக்கமும், கல்வியூக்கம், காப்பூக்கம், பின்பற்றூக்கம்), பற்றுக்கள் (பற்றுக்களின் ஆக்கம், பொருட்பற்று, கல்விப் பற்று, கலப்புப் பற்று, தற்பற்று, அறப்பற்று, பற்றுக்களின் முரண்), தொழிலின் வகை (பிரதித் தொழில், ஊக்கத் தொழில், கலப்புத் தொழில், தொடர்பூக்கத் தொழில், எண்ணத் தொழில், பழக்கத் தொழில்), தொழிலின் படிமுறை (அறிதல், விரும்பல், துணிதல், முயலல், முயலலின் ஒருமை, முயலலின் அளவு, ஊக்க ஒற்றுமையால் வரும் அகமுயற்சி, ஊக்கமுரணால் வரும் அகமுயற்சி, அகமுயற்சியின் ஏற்றம்), தொழிற்றுணிபு (ஊக்கமுரண், ஆராய்வுத் துணிபு, ஊக்க அடக்கம், பழக்க அடக்கம், பொய்யடக்கம், தூய்மை செய்தல், அமைதல்), மறைதொழில் (மறைதொழிலின் இலக்கணம், கனவு, பகற்கனவு, எண்ணாதெழுதுதல், அஞ்சனம் பார்த்தல், வசியம், முழு வசியம்), தாக்கம் (வேதனை, வேதனை விதிகள், இன்பவாதம், மிச்சிர வேதனை, சுவையின் நோக்கம், சுவையின் இலக்கணம், சுவையின் வகை, கோபமும் அச்சமும், அன்பு, கலப்புச் சுவை, சுவையின் பயன்), காண்டல் (அறிதலின் வகை, அகக்காட்சி, பொறிக்காட்சி, தற்காட்சி, மானதக் காட்சி, மனக்கோள், காட்சிப் போலி), தொடர்பறிதல் (தொடர்பு, தொடர்புவகை, தொடர்புப் பன்மை), தொடர்புப் பொருளறிதல் (தொடர்புப் பொருள், பிறபொருட்றொடர்பு, அளவு மாற்றம், பிரமாணப் பிரயோகம், கல்விப் பிரயோகம், ஆக்கப் பிரயோகம்), கற்பனை (கற்பனையின் வகைகள், கனா வகை, கணிப்பு வகை, நுட்பவகை), அறிவு நிகழ்ச்சி (மனவாற்றலின் அளவு, ஊசல், அவதானம், நிலைத்தல், நினைப்பு, இளைப்பு, நினைப்பின் ஆட்சி, மறப்பு), தன்மை (தன்மையின் கூறுகள், மனப்பான்மை, மனக்கோலம், மெய்க்கூறு, மனத்திண்மை, அறிவு) ஆகிய பதினைந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திருவருட்பயன் விளக்கவுரை முதலிய நூல்களை இயற்றியவராகிய யாழ்ப்பாணம் புலோலி நகர் சு.சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2836).

ஏனைய பதிவுகள்

casino

Simulador de ruleta de casino Casino de fiesta Casino There’s a reason EPT Barcelona is the players’ favorite stop on the calendar. What can you