12017 – மனோதத்துவமும் கலையும் போதனாமுறையும்.

பாலு (இயற்பெயர்: சக்தி அ. பாலஐயா). கொழும்பு 12: போதனா பிரசுராலயம், 364, பழைய சோனகத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1952. (கொழும்பு 13: நேரு அச்சகம், 94-1, மேட்டுத் தெரு, Hill Street).

(8), 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.

ஆரம்ப ஆசிரியர்களுக்கான மனோதத்துவமும் கலையும் போதனாமுறையும் பற்றிய இந்நூல், மனம்-கலை-கற்பனை, கலைஞனின் மனப்பண்பு-தேசத்தின் கடமை, ஞாபகப் பலன், கலையை ரசித்தல், மனோதத்துவமும் படிப்பிக்கும் கலையும், மாணவரின் மனப்பண்பு, குழந்தை காலக் கல்வி, கருத்து வெளிப்பாடு, மாணவ நட்பு, ஆசிரியர்களுக்கு, ஓவியம் அளிக்கும் பயன், ஆக்க சக்தி அவசியம், நமது தொடர்பு, நாட்டின் வருங்காலம் ஆகிய 14 இயல்களில் எழுதப்பட்டுள்ளது. சக்தி அ. பால ஐயா கவிஞர், ஓவியர், எழுத்தாளர், ஆசிரியர், சிந்தனையாளர் என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்து 2.8.2013இல் மறைந்தவர். தலவாக்கலை லிந்துலை தோட்டத்தை பிறப்பிடமாகவும், வத்தளை மாபோலையினை வசிப்பிடமாகவும் கொண்ட மலையகத்தின் மூத்த கவிஞர் தனிவழி கவிராயர் கலாபூஷணம் சக்தி பால ஐயா 26.07.1925 ஆம் ஆண்டு அப்பாவு விஸ்வநாதன்- லக்ஷ்மி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக தலவாக்கலை லிந்துலையில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை தலவாக்கலை அரச இருமொழி பாடசாலையிலும், இடைநிலை கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியிலும், உயர்கல்வியை இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இந்திய வம்சாவளியினர் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக பிரஜாவுரிமை அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டு ‘இலங்கை இந்திய வம்சாவளி பேரவை’ எனும் அமைப்பை உருவாக்கி அதனை வழிநடத்தி வந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19793).

மேலும் பார்க்க: 12293

ஏனைய பதிவுகள்

Salle de jeu Un peu Notre pays

Content Casino de dépôt de 5 $ monopoly: L’achat Avec Bonus Autres supports De Diction Allez Lorsque Maintenant Du Argent Effectif En compagnie de Votre