12018 சிறுவர் உளநலம் : ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர் கைந்நூல்.

சா.சிவயோகன், கோகிலா மகேந்திரன், தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ புஷ்பராம மாவத்தை, பாஹல பியன்வில, கடவத்தை).

xiii, 207 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5ஒ20 சமீ., ISBN: 955-1214-02-1.

தனது குடும்பத்திற்குப் பிறகு ஆரம்பப் பாடசாலையே ஒரு பிள்ளையின் உலகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. பாடசாலைச் சூழல் பிள்ளையின் தற்போதைய நிலையையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கின்றது. ஒரு மாணவனின் கற்றல் திறனையும் ஆர்வத்தையும், ஆற்றலையும், அந்த மாணவனின் மனநிலையே தீர்மானிக்கின்றது. ஆகவே தமது மாணவரின் உளநலத்தைப் பற்றி ஆசிரியர் அறிந்திருத்தல் மிக அவசியம். ஒரு பிள்ளையின் உளநலம் என்றால் என்ன? அதை எவ்வாறு கணிப்பிடுவது? கற்பித்தல் நடைபெறும்போதே உள சமூக ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது எவ்வாறு? உளநலப் பாதிப்புகளை எவ்வாறு இனங்கண்டு உதவவது? இவை எல்லா ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்கவேண்டிய விடயங்கள். இந்த அடிப்படை அறிவையும் ஆற்றலையும் வழங்குவதே இந்தக் கைந்நூலின் நோக்கமாகும். உளநலம், வளர்ச்சியும் விருத்தியும், கற்றல், பாட சாலைச் சூழல், குடும்பம், அனர்த்தங்கள், பிரச்சினைகள், உளவளத்துணை, உதவும் வழிமுறைகள் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் சாந்திகத்தின் அனுசரணையுடன் அடிப்படைக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தினால் தயாரிக்கப்பட்டது. இதற்கான நிதி உதவி, ஜேர்மன் சமஷ்டிக் குடியரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மூலம் பெறப்பட்டது. இலங்கை ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பகம், இலங்கையின் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந் நூல் ஆக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

The right way to Meet Foreign Girl

Finding love is a difficult task for many people. Many are lucky enough to find it early on https://email-brides.org/europe/belarus/ in, but for other folks, it