எஸ்.சிவதாஸ். வவுனியா: வவுனியா மனநலச் சங்கம், மனநலப் பிரிவு, மாவட்டப் பொது வைத்தியசாலை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
160 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0924-02-8.
வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் அவர்களின் சிறுவர் மனநலம் சார்ந்த மற்றுமொரு சமூக நூல். வருங்கால சந்ததியினரான சிறார்கள் தொடர்பிலான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளது. பூவிழி உதிரும் போர்மனத் துயரங்கள் (முன்னுரை), ஆசிரியையின் கருத்துரை, ஒரு தாயின் வாழ்த்துரை, வித்தியா, என்னுரை, உங்களுடன், வளர்ச்சிப் பருவங்கள், குழந்தை வளர்ப்பு, பிணைப்பு (Attachment), குடும்ப முரண்பாடுகள், மகிழ்வான சிறார்கள், புலமைப் பரிசில் பரீட்சை, குடும்ப இயங்கியல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சிறுவர்களின் சிந்தனைகள், தமிழ் சினிமாவும் மது விளம்பரமும், விசேட கல்வி அலகு, உலக தாய்மொழி தினம், சிறுவர்களைப் பாதுகாத்தல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: 12507