சுவாமி சின்மயானந்தா (ஆங்கில மூலம்), பிரமச்சாரி வியக்த சைதன்யா (தமிழாக்கம்). கொழும்பு 3: சின்மயா மிஷன், எண்.15, மைல்போஸ்ட் அவென்யூ, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).
69 பக்கம், விளக்கப்படம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
அன்னையின் மடியிலிருந்து உலகின் மடிக்குத் தாவிய ஒரு குழந்தைக்கு எப்படி இந்த பௌதிக உலகின் தோற்றமும் செயல்களும் புதிராயும் குழப்பங்களின் உறைவிடமாயும் தன் கரணங்களை மயக்கும் தன்மைகொண்டதாயும் இருக்குமோ அது போலவே, தன் அகங்கார உணர்வுகளிலிருந்தும், ஆசையின் பிடியிலிருந்தும் தவறான ஏக்கங்களின் தழுவல்களிலிருந்தும் விடுபட்டு ஆத்ம தரிசனம் காண வெளிவந்த ஒரு சாதகனுடைய மனோநிலையும் இருக்கும். மறைநூல்கள் காட்டும் ஒவ்வொரு மார்க்கமும், தெளிவின் அளவுகோலாய் தோன்றுவதற்குப் பதிலாக, மயக்கம்தரும் மாயவலையாகத் தோன்றும். எது கரை சேர்க்க வேண்டுமோ, அதுவே தன்னைக் கவிழ்ப்பது போல் தோன்றும். இந்த ஆரம்ப சோதனையிலிருந்து ஒரு விடுதலை விரும்பியை விடுவித்து சத்தியத்தை உணர்ந்து அவன் வாழ்வில் சத்திய கீதம் பாடச் செய்வதே இந்த நூலின் நோக்கமாகும். (சின்மயா மிஷன்- அறிமுக உரையில்). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3038).