12022 – அனர்த்த காலங்களில் நெருக்கீடுகளை எதிர்கொள்ளல்.

அனர்த்தகால உளநலப் பணிக்குழு. யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி பெரும் அழிவை ஏற்படுத்திச்சென்ற கடற்கோள் பேரழிவினைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய உள நெருக்கீடுகளைப் பற்றியும் அவற்றை எதிர்கொண்டு அவற்றின் பாதிப்புளைக் குறைப்பது எவ்வாறு என்பது பற்றியதுமான தகவல்களை இந்தக் கையேடு கொண்டிருக்கின்றது. யுனிசெப் தாபனத்தின் அனுசரணையுடன் இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1291/25489).

மேலும் பார்க்க: 13A18

ஏனைய பதிவுகள்

12984 – இராவண தேசம்: திருகோணமலை மண்ணின் வரலாற்றுப் பதிவுகள்.

திருமலை நவம் (இயற்பெயர்: திரு.சி.நவரத்தினம்). திருக்கோணமலை: வி.மைக்கல் கொலின், தாகம் பதிப்பகம், அனுசரணை, கனடா: உள்ளம் அமைப்பினர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், திருக்கோணமலை வீதி). xvi, 160 பக்கம்,

12561 – தமிழ் மலர்: மூன்றாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xv, 205 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1.95, அளவு: 20.5×16.5 சமீ.

14914 எச்.எஸ்.இஸ்மாயில்: ஒரு சமூக அரசியல் ஆய்வு.

எம்.எஸ்.எம்.அனஸ். புத்தளம்: இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம், 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

14148 நல்லைக்குமரன் மலர் 2005.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). ஒii, 160+ (54) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12246 – இலங்கை மத்திய வங்கி: பொருளாதார மீளாய்வு 1982.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1983. (கொழும்பு: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). xiv, 424 பக்கம்,