12024 – அன்புள்ள தம்பிக்கு 1000 உபதேசங்கள்.

அராலியூர் வி. செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: செல்வி வி.திருவருட்சோதி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, சித்திரை 2017. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு).

viii, 91 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-38168-1-8.

உலகப் புகழ்பெற்ற அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தபொழுது, ஆசிரியர் பெற்றுக்கொண்ட கருத்துக்களைத் தொகுத்து இந்நூலை எழுதியிருக்கிறார். மாக்கள் (விலங்குகள்) என்ற நிலையில் உள்ளவர்களை மக்கள் (மனிதர்) என்ற உயர்நிலைக்கு உயர்த்துவதற்கான வழகாட்டிகளாக இப்பொன்மொழிகள் அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் உயர்வகுப்பு கணித, விஞ்ஞான ஆசிரியரான அராலியூர் வி. செல்வரத்தினம் தன் இளமைக் காலத்தில் கணித, விஞ்ஞான நூல்களையும் பின்னாளில் ஆன்மீக நூல்களையும் எழுதி வெளியிட்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62091).

மேலும் பார்க்க: 12031

ஏனைய பதிவுகள்