சி.கணேஷ் (தொகுப்பாசிரியர்). வவுனியா: எம்.எஸ்.சி. கல்வி நிலையம், குருமன்காடு, 1வது பதிப்பு, மே 1999. (வவுனியா: ஜெயக்குமார் கணனிப் பதிப்பு, குடியிருப்பு).
72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
வேதங்கள், ஆகமங்கள், கிராமியத் தெய்வங்கள் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளின்கீழ் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. வேதங்கள் என்ற பிரிவில் இருக்குவேதம், யசுர்வேதம், சாமவேதம் ஆகிய மூன்று வேதங்கள் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆகமங்கள் என்ற பிரிவின்கீழ் ஆகமம் கூறும் பொருள் மரபு, ஆகமம் காட்டும் வழிபாட்டு நெறி, ஆகமம் விளக்கும் கலை, வேதத்திற்கும் ஆகமத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகிய தலைப்புகளில் போதிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இறுதிப் பிரிவு கிராமியத் தெய்வங்கள் பற்றிய சிறுதெய்வ வழிபாடு பற்றியதாகும். சிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு எனப் பல வகைகள் காணப்படுகின்றன. இந்த வகையான தெய்வ வழிபாட்டு முறை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப் படுகின்ற சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இவை பற்றிய விளக்கம் இப்பிரிவில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23719).